#Breaking:உச்சகட்டம்…கடந்த ஒரே நாளில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு;703 பேர் உயிரிழப்பு!

#Breaking:உச்சகட்டம்…கடந்த ஒரே நாளில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு;703 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,47,254 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 703 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,85,66,027 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,692 ஆக உயர்வு.

  • கடந்த 24 மணி நேரத்தில் 3,47,254 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 25,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,85,66,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 703 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,88,396 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,51,777 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,60,58,806  ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 19,24,051 ஆக இருந்த நிலையில்  20,18,825  ஆக அதிகரித்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,60,43,70,484 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 70,49,779 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு:

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 9,287 ஆக இருந்த நிலையில்,தற்போது 9,692 ஆக உயர்ந்துள்ளது.

Join our channel google news Youtube