#BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை..!

#BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை..!

மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம்  வருத்தமளிப்பதாகவும், மேலும், மூன்று நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபால். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இணையத்தில் புகார்கள் எழுந்து வந்தது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube