#BREAKING: பள்ளி விபத்து – தலைமை ஆசிரியர் மீது வழக்கு!

பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது காவல்துறை வழக்குப்பதிவு.

நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டிடடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. தலைமை ஆசிரியரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை 10:50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ஈடுபாடுகளில் சிக்கி காயமடைந்த மாணவர்கள் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்