#BREAKING: சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை.!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து ராஜவர்மனை நீக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர்.

சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதன்பின் பேசிய அவர், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறிய, சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஈடுபட்டதாலும், எம்எஸ்ஆர் ராஜவர்மன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்