#BREAKING: நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு..!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சசிகலா சந்தித்துப்பேசினார். 

வி.கே. சசிகலா நேற்று மாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனைப் பற்றியும் கேட்டு அறிந்தார்.

மேலும், ரஜினிகாந்த் கலையுலகின் உயரிய விருதான “தாதா சாகேப் பால்கே” விருது பெற்றதற்கும், தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் வி.கே. சசிகலா தெரிவித்துக் கொண்டார்.

 

author avatar
murugan