#BIGBREAKING: இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.! 22 நாடுகள் ஆதரவு., 11 நாடுகள் எதிர்ப்பு.!

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று நிறைவேறியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருந்தது. இதன் மீதான வாக்கெடுடுப்பு நேற்று நடைபெற இருந்த நிலையில், திட்டமிடலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒத்துவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், கியூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ஆதரவளித்துள்ளன.

இதனிடையே,  இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.மனித உரிமை அவையில் நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா. 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் மாகாண கவின்சில்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்