#Breaking:சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுக – அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்!

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில்,ஆகஸ்ட் 2-வது வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு என தெரிவித்தது.

இந்நிலையில்,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பாக,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதத்தால் தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தாமதாகிறது என்றும்,எனவே,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,பிஇ,கலை&அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும்,மேலும்,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் தரப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment