#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் விவகாரத்தில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு வி.வி.பேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்து  காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அந்த விவிபேட் இயந்திரம், 50 நிமிடம் பயன்பாட்டில் இருந்தகாகவும், அதில் மொத்தம் 15 ஒப்புகை சீட்டுக்கள் இருந்ததாக தேர்தல் அதிகாரி கூறினார்.

அதுமட்டுமின்றி, இரு சக்கர வாகனத்தில் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா? என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan