#BREAKING: இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்!

இலங்கை நாட்டின் 8வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன்பின், நேற்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தலில் 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் 223 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
2 பேர் புறக்கணித்த நிலையில், 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய அதிபரை தேர்வு செய்ய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த தேர்தலில் ரணில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க 2024 நவம்பர் மாதம் வரையில் இலங்கை அதிபர் பதவியில் இருப்பார் என கூறப்பட்டது.

தெரிவிப்பட்ட நிலையில், இன்று அதிரபராக பதவியேற்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். இலங்கை நாட்டின் 8வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் 134 எம்பிக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதையடுத்து அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, பிரதமராகவும், இடைக்கால அதிபராகவும் இருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது புதிய அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment