#BREAKING: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 26, 27-ல் கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கரையோரம் பலத்த காற்று வீசும் என்றும் இன்றும், நாளையும் கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 25, 26-ல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கரையோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 35 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

25 mins ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

36 mins ago

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

46 mins ago

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

1 hour ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

2 hours ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

2 hours ago