#BREAKING: தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்

தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டண சலுகை பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்ததாக மாணவர்கள் நீக்கப்படமாட்டார்கள் எனவும் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா சூழலால் வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை குறித்து பள்ளிகளிடம் முறையிடலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆர்டிஇ சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு பரிசீலிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்