#BREAKING : கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…!

கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற தலைவர் சபாநாயகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதனையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் 15 தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ள நிலையில், 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து  வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.