#BREAKING: பொங்கல் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எந்தவிதமான சிரமும் இல்லாமல் தங்களது ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

11 ,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் சென்னையில் இருந்து மட்டும் 4,078 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் 11-ம் தேதி அன்று சென்னையில் இருந்து 176 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 1297 பேருந்துகளும் இயக்கப்படயுள்ளது.

 12-ஆம் தேதி சென்னையில் இருந்து 1950 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 1,910 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 13-ஆம் தேதி சென்னையிலிருந்து 1952 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 2786 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்த முன்பதிவு மையங்கள் சென்னையில் 13 இடங்களில் உள்ளது. அதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையங்களும் உள்ளது.

மேலும் முன்பதிவு செய்துகொள்ள இணையதள வசதியான www.tnstc.in,tnstc official app, www.redbus.in,www.paytm.com,www.busindia.com போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

author avatar
murugan