#BREAKING : தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர்..! நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை..!

#BREAKING : தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர்..! நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை..!

பிரதமர் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி,திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி சென்னை வர இருந்த நிலையில், கொரோனா காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

 இந்நிலையில், பிரதமர் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், அதை ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும்.’ என கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube