#BREAKING : ரவுடிகளை ஒடுக்க ‘திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா’ பேரவையின் அடுத்த கூட்டத்தில் தாக்கல் – அரசு

தமிழக அரசின் விளக்கம் மகிழ்ச்சியளிப்பதாகவும், ரவுடிகளையும், சமூக விரோதிகளை ஒடுக்கும் மசோதா விரைவில் சட்டமானால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.

கடந்த  தினங்களுக்கு முன்னதாக, தமிழகம் முழுவதும், காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 ஆயிரத்திற்கும்  கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, அயனாவரத்தில் நடந்த மோதலில் கைதான வேலு என்பவர் மீதான குண்டாசை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில்,’திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு வரைவு சட்ட மசோதா’ அடுத்த சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து, இதுதொடர்பாக  கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற  நீதிபதி, தமிழக அரசின் விளக்கம் மகிழ்ச்சியளிப்பதாகவும், ரவுடிகளையும், சமூக விரோதிகளை ஒடுக்கும் மசோதா விரைவில் சட்டமானால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.