#BREAKING: தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி.!

#BREAKING: தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி.!

தமிழகத்தில் ஆக- 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி .

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு 3 கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்  நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainerswelfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ளஉடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர் மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை  திறக்க ஆகஸ்ட் 5 தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் (Standard Operation Procedure) தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!
விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி - டி.ஆர்.பாலு
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ