30 C
Chennai
Thursday, October 21, 2021

Breaking:டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது;ஏ.கே .47 பறிமுதல்..!

டெல்லியின் லக்ஷ்மி நகரில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; ஏ.கே .47, கைக்குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் லக்ஷ்மி நகரில் தங்கியிருந்த ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து  ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு கைக்குண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும்,அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், ரமேஷ் பார்க், லக்ஷ்மி நகரில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு இந்திய நாட்டவரின் போலி அடையாள அட்டையுடன் வாழ்ந்து வந்த நிலையில்,தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து ஒரு கையெறி குண்டு,ஒரு ஏகே 47 துப்பாக்கி,இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன”,என்று தெரிவித்துள்ளார்.மேலும்,அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More