#BREAKING: தடுப்பூசி விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

உள்நாட்டு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது அறிவித்திருந்தது. அதுபோல, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயம் செய்து அறிவித்திருந்தன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும் என்றும் 18-45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கவேண்டும். மேலும் மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. தடுப்பூசி திட்டத்திற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்