#BREAKING: இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல். 

டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்போர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால், டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார். இதனிடையே,  அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. இந்த நிலையில், ஓபிஎஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், அதிமுகவில் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் வரும் ஜூலை 11 அன்று சட்டவிரோதமாக பொதுக்குழுவிற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக எந்தவித அனுமதியும் பெறவில்லை, இதன் காரணமாக அந்த 11-ம் தேதி பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது என்றும் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

13 mins ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

59 mins ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

1 hour ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

1 hour ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

2 hours ago