#BREAKING : நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது..!

நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. செப்.12-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.