#Breaking : தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பு…! நடமாடும் காய்கறி,பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்…!

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடித்து முதல்வர் உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில், மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே சுற்றுவதால், 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு, ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை, தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.