#BREAKING: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை..! எஸ்பிஐ அறிவிப்பு..!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வாங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

SBI Report
SBI Report Image Source Twitter ETNowSwadesh

முன்னதாக, ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.