#BREAKING: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.

நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment