#BREAKING: நீட் தேர்வு ஒத்திவைப்பு.! அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நீட் தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இதனால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நீட் தேர்வுகள் குறித்து அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீட் மற்றும் JEE தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றினை அமைத்தது.

நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுனர்கள் அடங்கிய குழுவிடம் நாளை (அதாவது இன்று) இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

murugan
Tags: NEET2020

Recent Posts

ஐபிஎல் 2024: போராடிய குஜராத்… இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்ற டெல்லி அணி..!

ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

8 hours ago

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் குஜராத் அணி ..!! தாக்குப்புடிக்குமா டெல்லி ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…

11 hours ago

நாங்களும் வரோம்! ரீ-ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…

12 hours ago

ஓய்ந்தது பிரச்சாரம்…சூறாவளியாக சுழன்ற தலைவர்கள்.! சூப்பர் ஹைலைட்ஸ்…

LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…

12 hours ago

பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்!

Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…

12 hours ago

என்னது.. அதிகமா கோவப்பட்டால் முகச்சுருக்கம் ஏற்படுமா?..

Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான்…

13 hours ago