#BREAKING: நீட் தேர்வு ஒத்திவைப்பு.! அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு.!

#BREAKING: நீட் தேர்வு ஒத்திவைப்பு.! அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நீட் தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இதனால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நீட் தேர்வுகள் குறித்து அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீட் மற்றும் JEE தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றினை அமைத்தது.

நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுனர்கள் அடங்கிய குழுவிடம் நாளை (அதாவது இன்று) இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

Join our channel google news Youtube