#BREAKING: நீட் தேர்வு குளறுபடி – விடைத்தாளை பார்க்க அனுமதி!

நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டு குளறுபடியை நேரில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியிருந்தேன். தேசிய தேர்வு முகமை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720க்கு 564 மதிப்பெண் என இருந்தது.

ஆனால், நீட் தேர்வு முடிவுகளில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறி நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டு குளறுபடியை நேரில் ஆய்வு செய்ய அனுமதிகோரி மதுரை கிளையில் மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment