#BREAKING : நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு..!

நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான விண்ணப்பத்தை கடந்த 6-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தைப் பார்வையிட்டு அதன்பிறகு தேவையான அனைத்து தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களையும், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். பின்  விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு 

இந்த நிலையில், நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. நீட் விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1600-லிருந்து ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-லிருந்து ரூ.1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டிக்கு ரூ.900-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment