, ,

#BREAKING : 13 மணிநேர சோதனைக்கு பின் விசாரணைக்காக அழைத்து செல்லப்படுகிறார் அமைச்சர் பொன்முடி..!

By

Minister Ponmudi

நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை 7 முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.  செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு இந்தியன் வங்கி அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் வருகை புரிந்தனர்.

இதனை தொடர்ந்து,13 மணிநேர சோதனைக்கு பின், தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது சொந்த காரிலேயே விசாரணைக்காக அழைத்து சென்றனர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மகனையும் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.