BREAKING: மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட அதிரடி தடை.!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். அதன்படி, தமிழகத்தில் கிட்டத்தட்ட 850 திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன.

தற்போது, நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   அதாவது, சட்டவிரோதமாக 400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லிலித் குமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.