#Breaking:நில அபகரிப்பு வழக்குகள்;சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி..!

#Breaking:நில அபகரிப்பு வழக்குகள்;சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி..!

தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .இதனை எதிர்த்து,தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியது.அதன்பின்னர்,கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முத்துலெட்சுமி என்பவர் தனக்கு இழைக்கப்பட்ட நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க இதுவரை சிறப்பு நீதிமன்றம் செயல்படவில்லை.எனவே இந்த வழக்குகளை வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?,எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்,இது தொடர்பான தகவல்களை தமிழக அரசு 6 வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து,2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube