#BREAKING: மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு!

#BREAKING: மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு!

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டின்றி தேர்வானார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்ததை அடுத்து, மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் கடந்த 21ம் தேதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் போட்டியின்றி எம்பியாக தேர்வாகியுள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் எல் முருகன் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube