#BREAKING: கோடநாடு கணினி ஆப்ரேட்டர் மரணம் – தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை!

கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டம்.

கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக காவல்துறை மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக ஜாமீனில் உள்ள குற்றவாளிகள் என கருதப்படும் அனைத்து பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் குறித்து தனிப்படை போலீசார் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோடநாடு சம்பவத்தை தொடர்ந்து கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை செய்ததாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்று கோடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை தொடர்பாக மீண்டும் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்