#BREAKING: கறுப்பர் கூட்டம் -குண்டர் சட்டம் ரத்து..!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சார்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து  வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோவை பதிவு செய்த சோமசுந்தரம்,  வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் குகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனசேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுரேந்திர,ன் செந்தில் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்தபோது,தங்கள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது மூடநம்பிக்கை, கல்வியறிவின்மை ஒழிப்பதற்க்கவே தங்கள் வீடியோவை விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் காவல்துறை தரப்பில் ஒரு குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கக்கூடாது என்ற எந்த விதியும் இல்லை, கருப்பர் கூட்டத்தின் பதிவில் இந்து மதத்தின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சார்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

murugan

Recent Posts

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

27 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

39 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

3 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

3 hours ago