#Breaking: ஜார்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா -மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக வருகின்ற 29 ஆம் தேதி ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.
  • பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு  5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.பாஜக கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ,அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள்  தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜக மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.இங்கு ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

ஆளுநர் திரவுபதி முர்முர்வை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்  ஹேமந்த் சோரன். இதனையடுத்து  ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதமைச்சராக வருகின்ற 29-ஆம் தேதி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார்.