27 C
Chennai
Tuesday, October 26, 2021

#BREAKING: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, பட்டியலினத்தவருக்களுக்கான இடங்களை முறையாக ஒதுக்கவில்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. அந்த விசாரணைக்கு பிறகு தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த போவது இல்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் நடத்தி, மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநில திமுக அமைப்பு செயலாளர் சிவா தொடர்ந்த அவசர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More