#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை இரு நாட்களுக்கு தொடர வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நாளை நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மிக கனமழையும் 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment