#BREAKING : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா…!

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்ற அவர், ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

மேலும், அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராக நீடிக்கபோவதாகவும், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஜராத்தை பொறுத்தவரையில், அம்மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முதுகெலும்பாக காணப்படுகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் நடவடிக்கைகள் காரணமாகவும், தனது தனிப்பட்ட உடல்நிலை காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் ரூபானி ராஜினாமா குறித்து கட்சி தலைமை சார்பாக எந்த அதிகாரபூர்வ  வெளியிடப்படவில்லை. ஆனந்தி பென் படேலுக்கு பின், விஜய் ரூபானி 2016-ஆம் ஆண்டு முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.