#BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – தமிழக அரசு எச்சரிக்கை!

அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வரும் 28, 29 தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்றும் 28, 29 தேதிகளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்களை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்