#BREAKING: மாணவர்களின் கவனத்திற்கு..செய்முறை தேர்வுக்கான நேரம் குறைப்பு!

practicalexam

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தை குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தொழிற்கல்வி மற்றும் பொது பிரிவு ஆகியவற்றில் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை இணையதளம் வாயிலாக பதிவேற்ற வேண்டும் என்றும் மதிப்பெண் விவரங்களை மே 14-ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான (பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவி) செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.