#Breaking:வெள்ள தடுப்பு பணி – முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

செங்கல்பட்டு:மழை,வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக அண்மையில் பெய்த கனமழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.குறிப்பாக,சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனையடுத்து,தமிழக முதல்வர் மற்றும் அதிமுக,பாஜக தலைமையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

இந்நிலையில்,தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டிடிகே நகர்,வாணியம் குளம் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றார்.மேலும்,வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களிடம் குறைகளை கேட்டு,மனுக்களையும் பெற்று வருகிறார்.

குறிப்பாக,ரூ.238 கோடியில் அடையாறு உபரி வடிநிலத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார்.