#breaking: விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

அதாவது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விதி எண் 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து, மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்