#Breaking:”இரட்டைத் தலைமையால் பின்னடைவு” – மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்!

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில்,ஒற்றைத் தலைமை வேண்டும் என்று 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில்,அதனை தற்போது மேடையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வாசித்தார்.அப்போது,”100 ஆண்டுகளாக ஆனாலும் கழகம் நிலைத்து நின்று புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் என்றால் வலிமையான,தைரியமான தெளிவான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.குறிப்பாக இரட்டைத் தலைமையில் ஒருங்கிணைப்பு இல்லாத முரண்பாடான செயல்பாடு காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனவே,இப்பொதுக் குழுவில் இரட்டை தலைமையை நிராகரித்துவிட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றுவது தொடர்பாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும்.மேலும்,இந்த பொதுக்குழுவிலேயே,அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Comment