#BREAKING: டெல்டா போல் பரவத் தொடங்கியதா ஓமைக்ரான்? – மத்திய அரசு

டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல்.

இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை ஓமைக்ரனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில். இந்த தகவலை கூறியுள்ளது. அதாவது, கொரோனா இரண்டாவது அலையின் போது உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் எந்த அளவிற்கு வேகமாக பரவியதோ, இதற்காக மாற்றாக ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக கூறியுள்ளது.

டெல்டா வைரசுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் வேகமாக உலகளவில் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்திருந்த நிலையில், டெல்டா வைரஸ் பரவியதை போல ஓமைக்ரான் பரவும் நிலை எட்டி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்