#Breaking: போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.! அனுமதியை மீறி போராட்டம் நடைபெறும் திமுக அறிவிப்பு.!

#Breaking: போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.! அனுமதியை மீறி போராட்டம் நடைபெறும் திமுக அறிவிப்பு.!

  • ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் (நாளை) தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
  • தஞ்சையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் (நாளை) தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பாரதிய ஜனதா அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கபட நாடகத்தை காட்டுவதாக கூறியுள்ளார். எனவே விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 28-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முக.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், தஞ்சையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் அனுமதியை மீறி போராட்டம் நடைபெறும், என தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரைசந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube