#BREAKING: அதிபர் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம்.! ஏன்?

தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் ஜோ பைடன் 238 சபை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ரொனால்ட் ட்ரம்ப் 213 சபை வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்கள் தேவை என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

இதனால் மொத்தம் 7 மாகாணங்களில் முடிவுகள் வெளிவரவில்லை. இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

இதனிடையே, அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எது எப்படியோ தேர்தல் முடிவு வந்தால் மட்டுமே அடுத்த அமெரிக்கா அதிபர் யார் என்று பார்க்க முடியும். அதனால் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போம்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் என தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்