#BREAKING: மக்களே உஷார்.. காவலர்களுக்கே ஏமாற்றம் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல்.

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி காவலர்கள் இருவரே ஏமாற்றப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்களும், அவர்களை சார்ந்தவர்களும் சுமார் ரூ.1.44 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம் எனவும் காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எனவே, தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கியில் முதலீடு செய்யுங்கள் என்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்யும்போது கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்