#BREAKING: குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என்றும் இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ.950 கோடியில் சுமார் 6,000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என குடிசை மாற்றுவாரிய கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மதுரை மேம்பால பணியின்போது உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்