#Breaking: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 7 பேர் பலி.! 805 பேருக்கு பாதிப்பு.!

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. 

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று 407 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 8731 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 805 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் வந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து வந்த 726 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இன்று ஒரே நாளில் 11,865 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,21,480 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 50% கொரோனா வைரசால் இறப்பவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 4.21 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்