#BREAKING: தமிழகத்தில் இன்று புதிதாக 5,584 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,584 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,80,524 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 993 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 6,516 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,23,231 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83,573 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 55,44,850 ஆக உள்ளது. மேலும், தற்போது 49,203 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்