#Breaking-நடிகை குஷ்பு காங்.,நீக்கம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நேற்று மாலை  டெல்லிக்கு சென்றார்.ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று பரவியநிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த தகவலை காங்கிரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் காங்., மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்தித்து நடிகை குஷ்பு பாஜகாவில் இணைகிறார்  என்ற தகவல் வெளியாகியுள்ளது.



author avatar
Kaliraj